கடல் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்.
மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னைக்குடா கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் எல்லை வீதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (வயது 15) என்பவரே செவ்வாய்க்கிழமை 28.11.2023 மாலை கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார்.
கடைசியாக அவரது வீட்டுக்கு அண்மையிலுள்ள தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சிறுவனை தேவாலய வகுப்பிலுள்ள ஆசிரியை கண்டதாகச் சொன்னார் என்று சிறுவனின் தாய் தெரிவித்தார்.
நண்பர்களுடன் சேர்ந்து இவர் புன்னைக்குடாக் கடலுக்குச் சென்று நீராடிக் கொண்டிருக்கும்போது கடலில் மூழ்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக உதவிக்கு விரைந்தோர் தேடிய போதிலும் மூழ்கிய சிறுவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து மறுநாளான புதன்கிழமை 29.11.2023 மாலை வரை மூழ்கிய சிறுவனைக் கண்டு பிடிக்க புன்னைக்குடா கடலில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டபோதும் சடலம் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment