மட்டக்களப்பில் குளவிக் கொட்டுக்கிலக்காகி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.
மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கன்னங்குடா மகா வித்தியாலய மாணவர்கள் இன்று புதன்கிழமை(08.11.2023) காலை பாடசாலை செல்லும் வழியில் குளவி கொட்டுக்கிலக்காகியதில் எட்டு மாணவர்கள் சுகயீனமுற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை பாடசாலைக்கு செல்லும் போது குறிஞ்சாமுனை எனும் இடத்தில் வீதி ஓரமாக நின்ற பனை மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து மாணவர்கள் மீது கொட்டியதில் எட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாண்டியடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை இவ்வீதியால் சென்ற வேறு நபர் ஒருவரும்இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
0 Comments:
Post a Comment