கனரக வாகன இயக்குனர் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கனரக வாகன இயக்குனர் பயிற்சி நெறியை நிறைவு செய்த 25 நபர்களுக்குரிய சான்றிதழ்கள்கள் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(05.11.2023) வழங்கி வைக்கப்பட்டன.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சவனேசதுசை சந்திரகாந்தனின் பணிப்புரையின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக கனரக வாகன இயக்குனர்ளுக்கான பயிற்சி நெறியை ஆரம்பித்திருந்தது.
மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவிலுமுள்ள தொழிலின்றி காணப்படும் இளைஞர்களின் தொழில் வாய்ப்பை அதிகரிப்பதற்காக அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் ஊடாக இக்கற்கை நெறியை நாடாத்தப்பட்டது. இக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட பெறுமதியான சான்றிதழ் அதிதிகளினால் இதன்போது வழங்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சி நெறி சிறந்த நிபுணர்களினால் வழங்கப்படுகின்ற மையினால் பயிற்சியை பூர்த்தி செய்கின்ற நபர்கள் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது. கனரக வாகன இயக்குனர்களுக்கான கற்கை நெறிகள் வெளிமாவட்டங்களில் இடம்பெற்றுவரும் நிலையில் கிராமிய தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திருப்பெரும் துறையில் இப்பயிற்சிநெறி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்பயிற்சி நெறியை வெளிமாவட்டங்களில் கற்பதாயின் அதிக பணச் செலவு மற்றும் மொழிப் பிரச்சினைகள் காணப்பட்டன. இப்பயிற்சி தமது வாழ்வாதாரத்தை உயர்த்தியதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இதன்போது கனரக வாகன இயங்குனர் பயிற்சிச் சான்ழிதளைப் பெற்ற இளைஞர்கள் தெரிவித்தனர்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்பு செயலாளர் மா.தயாபரன், மண்முனை வடக்கு பிரதேச செயளாளர் வி.வாசுதேவன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் கே.சிவகுமார், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment