தீபாவளி பண்டிகையை இந்துக்கள் இன்றயதினம் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்து ஆலயங்களில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகளும், கிரியைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை(12.11.2023) காலை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இதன்போது ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள் தலைமையிலான குருமார் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். இதில் களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலன சபையினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததோடு, ஆலய பிரதம குரு மற்றும் பெரியோர்களால் கலந்து கொண்ட மக்களுக்கு தீபாவளி பண்டிகையின் சிறப்புக்கள் தொடர்பில் கருத்துக்களையும் தெரிவித்து, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment