8 Nov 2023

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் அடையாள வேலை நிறுத்தம்.

SHARE

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் அடையாள வேலை நிறுத்தம்.

கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் காரணமாக புதன்கிழமை(08.11.2023)  மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல தபால் அலுவலகங்களிலும் மூடப்பட்டுள்ளதன் காரணமாக பொது மக்களின் அன்றாட தபாற் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

அரசாங்கத்தினால் நுவரெலிய தபால் அலுவலகத்தை விற்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தகோரி இந்தவேலை நிறுத்தம் ஒன்றிணைந்த தொழிற்சங்க முன்னணியினால் இது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தூரஇடங்களில் இருந்து வரும் தபால் சேவைகள் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து தபாலகங்களிலும் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அஞ்சலின் பாரம்பரியத்தை விற்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனும் கோசங்களை அடிப்படையாக வைத்தே இந்த தொழிற்சங்க முன்னணியினர் வேலை தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு நகரின் பிரதான தபால் நிலையத்திற்கு சேவையினைப் பெறவந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது. இதனால் பொதுமக்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது உறவிர்களுக்கு அனுப்ப இருந்த வாழ்த்து மடல் சேவை உள்ளிட்ட வேறு அத்தியாவசிய தபால் சேவைகளும் பொலீசார் விதிக்கும் தண்டப்பன சேவை உட்பட அனைத்து இதன்போது பாதிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.









 

SHARE

Author: verified_user

0 Comments: