பலஸ்தீனப் படுகொலைகளைக் கண்டித்து இஸ்ரேலுக்கெதிராகப் பேரணி.
பலஸ்தீனத்திலும் காஸா பிரதேசத்திலும் இஸ்ரேல் மேற்கொள்ளும் அட்டூழியங்களையும் போர்க் குற்றங்களையும் கண்டித்தும் போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை 03.10.2023 மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகரில் கண்டன எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்த கண்டன எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் இறுதியில் பலஸ்தீனப் பொதுமக்கள் சிறுவர்கள் நோயாளிகள் பெண்கள் ஆகியோர் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் அட்டூழியங்களையும் போர்க் குற்றங்களையும் கண்டித்து கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன. அத்தோடு பலஸ்தீன நாட்டின சுதந்திரத்தை உறுதி செய்து இஸ்ரேலை வெளியேற்ற ஐக்கிய நாடுகள் சபையைக் கோருவதற்காக கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா முதல் கையெழுத்தை இட்டு கையொப்ப சேகரிப்பை ஆரம்பித்து வைத்தார்.
0 Comments:
Post a Comment