26 Nov 2023

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நியமனம்!!

SHARE


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த (21) செவ்வாய்க்கிழமை குறித்த நியமனம் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏறாவூர்ப்பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென் மேற்கு, போரதீவுப்பற்று, கோறளைப்பற்று தெற்கு   பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழு தலைவராக இருந்து மக்களுக்கு சேவை புரிந்து கொண்டிருந்த நிலையில் மாவட்ட  அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதியினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: