மாங்காடு வாசகர் வட்டம் நடாத்திய பரிசழிப்பு விழா.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு கிராமத்தின் பொதுநூலகம், வாசகர் வட்டம், மற்றும், சிறுவர் வாசகர் வட்டம் என்பன இணைந்து நடாத்திய பரிசழிப்பு விழா மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் தெ.டினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாங்காடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பே.கிருஷ்ணமூர்த்தி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்ஷன், வளைகுடா வானம்பாடிகள் அமைப்பின் நிபுணத்துவ ஆலோசகர் இரா.கலைவேந்தன், மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கடந்த காலங்களில் பாடசாலை மட்டத்திலும், வாசிப்பு போட்டிகளிலும் பங்கேற்று வெற்றியீட்டிய மாணவர்களுக்கு கலந்து கொண்டிருந்த அதிகதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment