களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை.
சுகாதார ஊழியர்களுக்காக 5 நாள் வேலைத்திட்டத்தை வழங்கல், மத்திய அரசின் மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களிற்காக மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பள வரையறையை நீக்குதல். மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக ரேட் முறையை வழங்குதல், தற்போது வழங்கப்படும், 1000 ரூபா விசேட கொடுப்பனவு 7000 ரூபா வரை அதிகரித்துக்கொள்வது, சீருடை கொடுப்பனவு 15000 ரூபா வரை அதிகரித்துக்கொள்வது, முறையான இடமாற்ற முறையொன்று மற்றும் இடமாற்றம் விரைவாக வழங்குதல், ஓய்வூதிய சம்பளத்தை உறுதிப்படுத்துதல், ஊழியர் பற்றாக்குறையின் போது ஆட்சேர்ப்பு செய்தல், அனைத்து பதவி உயர்வுகள் வழங்குவது, தொடர்பாக முன் நடவடிக்கைகள் எடுத்தல்.
மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்வதல் மற்றும் சத்திரசிகிச்சைகள் வழமைப் போல் நடாத்துதல். நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதற்காக 20,000 ரூபா வினால் சம்பளத்தை அதிகரித்தல், உள்ளிட்ட கோரிக்கை முன்வத்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment