11 Nov 2023

களுவாஞ்சிகுடியில் தீபாவளி வியாபாரம்.

SHARE


களுவாஞ்சிகுடியில்
தீபாவளி வியாபாரம்.

தீபாவளிப் பண்டிகையை இந்துக்கள் நாளையத்தினம் ஞாயிற்றுக்கிழமை (12.11.2023) கொண்டாடவுள்ள நிலையில் வியாபார நிலையங்களிலும் மக்கள்  இன்றயதினம் சனிக்கிழமை தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்கள் மாத்திரம் செறிந்துவாழும் பாட்டிருப்புத் தொகுதியின் மத்தியாக விளங்குகின்ற களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியில் அமைந்துள் வர்த்தக நிலையங்களில் வியாபாரங்கள் சற்று கழைகட்டியுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

எனினும் கடந்த காலங்களைவிட தற்போதைய நிலையில் பொருட்களுக்கு அதிக விலையேற்றம் காரணமாக மக்கள் ஆர்வத்துடன் பொருட்களைக் கொள்வனவு செய்யவில்லை எனவும், சிறுவர்களுக்கும், குமந்தைகளுக்குமான புத்தாடைகளை கொள்வனவு செய்வதோடு, வீடுகளுக்குரிய மிகவும் அத்தியாசியப் பொருட்களையும் மக்கள் கொள்வனவு செய்து கொண்டு செல்வதாக அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: