19 Nov 2023

மலையக சமூக மக்களின் ஆற்றல் மேம்பாட்டு பொருளாதார விருத்திக்காக திட்டங்கள் அமுல்.

SHARE

மலையக சமூக மக்களின் ஆற்றல் மேம்பாட்டு பொருளாதார விருத்திக்காக திட்டங்கள் அமுல்.

மலையக சமூக மக்களின் ஆற்றல், மேம்பாடு, பொருளாதார விருத்தி, தகவல் தொடர்பாடல் திறன்கள் என்பனவற்றை அபிவிருத்தி செய்வதற்காக திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருவதாக  சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு அமைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிகாமணி மயூரன் தெரிவித்தார்.

மலையகத்தில் அமுல்படுத்தப்படும் திட்டங்கள் சம்பந்தமான வருடாந்த மீளாய்வுக் கூட்டம் வார இறுதியில் நுவரெலியா கிறீன் சிற்றி விடுதியில் இடம்பெற்றது.

அங்கு நிகழ்வில், தகவல் தொடர்பாடல் பயிற்சி நிலையமும் பெருந்தோட்ட மனிதநேய  அபிவிருத்தி வள நிலையமும் திறந்து வைக்கப்பட்டன.

2023இல் தொடங்கப்பட்டதோட்டங்கள் மற்றும் கிராமங்களில் கூட்டுறவுகளின் கொள்ளளவுஎன்ற ஆரம்ப ஐந்தாண்டு திட்டம், தோட்ட மற்றும் கிராமப்புற சமூகங்களின் சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2022இல் தொடங்கப்பட்ட  “உண்மையான மாற்றத்திற்கான குழந்தைத் தொழிலாளர் இல்லாத நிலைமையை உருவாக்குதல்எனும் இரண்டு வருடத் திட்டம்  ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமூகங்களில் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. சமூகம் சார்ந்த குழந்தை பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும் இந்த திட்டங்கள் உதவியுள்ளன.

 2014ஆம் ஆண்டு தொடக்கம் பாம் அறக்கட்டளை நிறுவனம் சர்வதேச தன்னார்வ உதவு ஊக்க நிறுவனமான வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணை ஊடாக மலையக கிராமப்புற சமூகங்களுக்கு நன்மை பயக்கும்  இத்திட்டங்களை  அமுலாக்கி வருகின்றது.

இந்த நிகழ்வுகளில் நுவரெலியா மாவட்ட மேலதிகச் செயலாளர் சுஜீவா போதிமான்ன, வலப்பனை பிரதேச செயலாளர் ஷாலிகா லிந்தகும்புர, பெருந்தோட்ட மனித அபிவிருத்தி அறக்கட்டளையின் தலைவர் பாரத் அருள்சாமி, அதன் பணிப்பாளர் லால் பெரேரா, நுவரெலியா மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் சரத் அமுனுகம, உட்பட  பிரதேச செயலக அதிகாரிகள் பிராந்திய பணிப்பாளர்கள்வலயக் கல்வி அலுவலகங்களின் அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன, சுகாதார நிபுணர்கள் தாதியர்கள்கல்வித் துறையின் பிரதிநிதிகள்  ஆகியோரும் கலந்துகொண்டனர்.   

 







 

 

SHARE

Author: verified_user

0 Comments: