நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிக்க குறைந்தது 20 வருடங்களாவது செல்லும் பாக்கியசோதி சரவணமுத்து.
நாடு சுமுக நிலைக்குத் திரும்பி அபிவிருத்திப் பாதையில் பயணிக்க குறைந்தது 20 வருடங்களாவது செல்லும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டுதான் எல்லாமே இடம்பெறுகின்றது.
அடுத்த வருடம் செப்ரெம்பெர் மாதமளவில் ஒரு தேர்தலை எதிர்பார்க்க முடியும், ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டுதான் இப்பொழுது எல்லாமே இடம்பெறுகின்றது என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
“இலங்கையில் சமூக சகவாழ்வை முன்னேற்றுவதற்கான முன்கூட்டிய எச்சரிக்கைச் செயல்திறன்களை பலப்படுத்துதல்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார். காணி, நீர், வாழ்வாதாரம், வெறுப்புப் பேச்சு, கருத்துச் சுதந்திரம், அணிதிரண்டு செயல்படுதல் உள்ளிட்ட விடயங்களில் நாடளாவிய ரீதியில் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சவால்கள் முரண்பாடுகள் பற்றிய தகவல்களைத் திரட்டும் செயலமர்வு சனிக்கிழமை ஹபறணை சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிதி அனுசரணையில் நாடளாவிய ரீதியில், இடம்பெறும் இந்த தகவல் திரட்டல் செயல்திட்டம் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் அமுலாக்கம் செய்யப்படுகின்றது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளரும் சட்டத்தரணியுமான லயனல் குருகே தலைமையில் இடம்பெற்ற இந்த பயிற்சிச் செயலமர்வில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட 25 மாவட்டங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட சமாதான செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வு ஊடகவியலாளர்கள் ஆகியோர்; கலந்து கொண்டனர். நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, அடுத்த தேர்தலொன்று நடந்து முடியும் வரை இலங்கையில் எந்தவிதமான மாற்றங்களையோ செயல் திட்டங்களையோ அமுல்படுத்த முடியாது போகலாம். அதனால்தான் இப்பொழுதிருக்கின்ற அரசாங்கம் அடுத்து வருகின்ற தேர்தலிலேயே குறியாக இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலை இலக்காக் கொண்டுதான் அனைத்து செயற்பாடுகளும் இருக்குமேயொழிய அதனைத்தாண்டி வேறு எதனையும் எங்களால் எதிர்பார்க்க முடியாது.
சமூர்த்தித் திட்டம் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக அசுவெசும கொண்டு வரப்பட்டதும் தேர்தலை மையமாகக் கொண்டுதான். எதிர்காலத்தில் வரி விதிப்புக்கள் அதிகரிக்கலாம். அது எவ்வாறான வரிவிதிப்புக்களாக இரக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாத நிலை உள்ளது. அடுத்த வருடம் செப்ரெம்பெர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பாக என்ன நடக்கப்போகிறது என்பதையும் எங்களால் அனுமானிக்க முடியாதுள்ளது.
இருந்தடிபோதிலும், இலங்கையில் நடந்த சம்பவங்கள் பற்றிய உண்மையைக் கண்டறியும் குழு உருவாக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. பொறுப்புக் கூறலில் இலங்கை அரசாங்கம் அன்றிலிருந்து இன்றுவரை நழுவிச் செல்லுகின்ற போக்குத்தான் காணப்படுகின்றது.
எனது கணிப்பின்படி இலங்கை சுமுகமான நிலைமையை அடைந்து அதன் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்ல, இன்னும் குறைந்தது 20 வருடங்களாவது எடுக்கலாம். அதுவரையில் நாட்டு மக்கள் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டித்தான் இருக்கும்.” என்றார்.
0 Comments:
Post a Comment