அந்தணர் சிறார்களுக்கு ஆகமக் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்.
கிழக்கிலங்கை இந்துக்குரமார் ஒன்றியத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசக்கிளையால் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட அந்தணர் சிறார்களுக்கு ஆகமக் கல்விச் செயற்பாடுகளை துரிதமாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றியத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசக் கிளை தெரிவித்துள்ளது.
இக்கற்றல் செயற்பாடுகள், எதிர்வரும் 2023.10.23 ஆம் திகதி களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் சமய வழிபாடுகளோடு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இக்கற்றலில் இணைந்து கொள்வதற்கு ஆர்வமுடைய மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக் குருமாரின் 15 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள், 0752814495, 0752351397, ஆகிய தொலைபோசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
கிழக்கிலங்கை இந்துக்குரமார் ஒன்றியத்தின், களுவாஞ்சிகுடி பிரதேசக் கிளையால் ஏற்கனவே வேத சிவாகம பாடசாலை ஒன்று இயக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment