9 Oct 2023

ஆயித்தியமலையில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் மாணவர்கள் கெளரவிப்பு.

SHARE

ஆயித்தியமலையில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் மாணவர்கள் கெளரவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஞாயிற்றுக் கிழமை(08.10.2023) நடைபெற்றது.

ஒன்றியத்தின் தலைவர் வீ.ஜெகதீபன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஆயித்தியமலை வடக்கு, ஆயித்தியமலை தெற்கு, ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் பல்கலை கழகம் மற்றும் தேசிய கல்வியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், பிரதேச செயலக நிருவாக உத்தாயோகத்தர் எம். கோமளேஸ்வரன்  உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.கணேஸ் மற்றும் ஆயித்தியமலை பொலிஸ் நிலைய  பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலைகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை பெளதீகவளப் பற்றாக்குறையுடன் இயங்கிவரும் பாடசாலைகளில் கற்று இம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்நிகழ்வின்போது வரலாற்றில் முதல் தடவையாக நெல்லூர் கலைமகள் வித்தியாலயத்தில் இருந்து பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் இதன்போது அதிதிகளால் கெளரவிக்கப்பட்டனர்.

மாணவர் கெளரவிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து அதிதிகள் கெளரவிப்பும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வுடன்  கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.





 

SHARE

Author: verified_user

0 Comments: