சிறுவர்களுக்கு சரீர தண்டனையை ஒழிப்போம் - வவுணதீவில் சிறுவர்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு.
'சிறுவர்களுக்கு சரீர தண்டனையை ஒழிப்போம்' தலைப்பிலான சிறுவர்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை (09.10.2023) வவுணதீவில் இடம் பெற்றது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான இளைஞர் கூட்டணி, சயில்ட் பண்ட் (child Fund) ஏ.யூ வங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து மாபெரும் கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது.
வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னால் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலை முகாமையாளர், ஏ.யூ லங்கா நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இங்கு இடம்பெற்ற கையெழுத்து பிரச்சாரத்தில் பங்குபற்றினர்.
இதன்போது பெருமளவானோர் வருகை தந்து தமது கையெழுத்தினை இட்டு இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment