ஈர்க்குத் தடியை கையில் ஏந்தியபடி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையார்கள் மைலத்தமடு, மாதவனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேச்சல்தரைப் பிரச்சனைக்கு உரியதீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் பண்ணையாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வார்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமண தேரர் மற்றும் பெரும்பான்மை இன மக்கள் சிலரால் பண்ணையாளர்களின் வேண்டுகோளுக்கு எதிராகவும், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுக்கும் எதிராகவும் மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் தும்புத்தடி, மற்றும் விளக்குமாறு ஆகியவற்றைக் கையில் ஏந்தியபபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment