2 Oct 2023

ஜனாவின் வாக்குமூலம்” மணிவிழா மலர் வெளியீட்டு.

SHARE

ஜனாவின் வாக்குமூலம்”  மணிவிழா மலர் வெளியீட்டு.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான, கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களின் 60 வது பிறந்த நாளில்ஜனாவின் வாக்குமூலம்எனும் மணிவிழா மலர் வெளியீட்டு ஞாயிற்றுக்கிழமை(02.09.2023) மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு நிகழ்வின் மணிவிழா மலரான ஜனாவின் வாக்குமூலம் எனும் நூலை நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமிடமிருந்து முதற் பிரதியை பெற்றுக் கொண்டார்.

மாவட்டத்தில் பலத்த மழைக்கு மத்தியிலும் இடம்பெற்ற இந்த மணிவிழா ஜனாவின் வாக்கு மூலம் நூல் வெளியீட்டு நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், பாக்கியச்செல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், .கனகசபை, சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.நகுலேஸ், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஏனை அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், ஆதரவானர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்; கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த ஜனாவின் வாக்குமூலம் என்ற அரசியல் வரலாற்று மணிவிழா மலர் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

அவரது 40 வருட அரசியல் வரலாறு இந்த ஜனாவின் வாக்குமூலம் மணிமலர் வெளியீட்டில் அடங்கியுள்ளது.

தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் யுத்தத்தால் மரணித்தவர்களுக் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்ஜனாவின் வாக்குமூலம் மணிவிழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது கலந்து கொண்டிருந் பிரமுகர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றதுடன், கிழக்கு மாகாண ஆளுநரினால் நாடாளுமன்ற உறுப்பினர்; கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஏனையோரும் நினைவுச் சின்னங்ளும், வாழ்த்துப்பாக்களும் வழங்கி பொன்னாடைகளும் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.





 



















SHARE

Author: verified_user

0 Comments: