களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கருவள சிகிச்சை அலகு திறந்து வைப்பு.
மகப்பேற்று வைத்திய நிபுணார் கே.வசந்தராஜா அவர்கள் இதன்போது கலந்து கொண்டு சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வைத்திய அதிகாரி கிரிசுதன், பிரிவு சுகாதார வைத்திய அதிகாரிகள், அவ்வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், கணக்காளர், தாதிய பரிபாலகிகள், தாதியர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சிகிச்சை நிலையம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை செயற்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். அப்பிரதேச மக்கள் எதிர் நோக்கும் மகப்பேற்று இடர்பாடுகளுக்கு உன்னதமான சேவையினை வழங்கக்கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஜி.சுகுணான் அவர்களது ஆலோசனைக்கமைவாகவும், வைத்திய அத்தியட்சகர் கே.புவனேந்திரநாதன் அவர்களது நிருவாக வழிகாட்டுதலுக்கமைவாகவும், மகப்பேற்று வைத்திய நிபுணர் கே.வசந்தராஜா அவர்களது அர்ப்பணிப்பான மருத்துவ சேவையிலும் இக்கருவள சிகிச்சை நிலையம் சிறப்பாக செயலாற்றும் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.
0 Comments:
Post a Comment