தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா இறைபதம் அடைந்தார்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசா(நவம்) வெள்ளிக்கிழமை (13.10.2023) இறைபதம் அடைந்துள்ளார்.
25,யூலை,1946 பிறந்த அவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார். இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (15.10.2023)பி.ப 03, மணிக்கு 68 புகையிரத நிலையவீதி, மட்டக்களப்பில், இடம்பெறவுள்ளது.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில உயிரிழந்துள்ளார்.
காலம் சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், கோட்டைக்கல்லாற்றில் திருமணம் செய்து வாழ்ந்து வந்த அவர், தற்போது மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் வசித்து வருகின்றார்.
ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் காலம் சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பூ.கணேசலிங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியிருந்தார். தொடர்ந்து அவர் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்த்தராக பணியாற்றியிருந்தார்.
அரசியலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். பின்னர் 2000 ஆம் ஆண்டுத் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டுத் அதில் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கவில்லை.
2000 மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிமலன் சௌந்தரநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு அடுத்த நிலையிலிருந்த மேற்படி பொன்.செல்வராசா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றார்.
தொடர்ந்து 2001 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியை நிறுவியதன் பின்னர் அக்கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2010 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
தொடர்ந்து 2010, தொடக்கம் அவர் மரணிக்கும் வரையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சின் மூத்த துணைத் தலைவராகவும், மத்தியகுழு, அரசியல், குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் அவர் செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment