டிக்டொக் மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்.
மட்டக்களப்பு நாவலடி பகுதியில் வாவிப்பகுதியில் டிக்டொக் செய்வதற்காக தோணியில் சென்றபோது தோணி கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) பிற்பகல் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதிக்கு சீலாமுனைப்பகுதியிலிருந்து ஆறு இளைஞர்கள் தோணி ஊடாக வந்துள்ளனர்.
அப்பகுதியில் டிக்டொக் செய்துவிட்டு தோணியில் மீண்டும் சீலாமுனைக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது தோணி கவிழ்ந்ததினால் இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன்போது இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் பிரதேச மக்களினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதில் மட்டக்களப்பு சீலாமுனைப்பகுதியை சேர்ந்த 19 வயதுடைய தவசீலன் கிருஸாந்த், மாமாங்கம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பிரபாகரன் பிருஜனன் ஆகியோர் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீரில் மூழ்கிய இளைஞர்களை மீனவர்களும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளதுடன் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment