களுவாஞ்சிகுடி சாயி பாலர் காடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சாயி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய மைதானத்தில் செவ்வாய்கிழமை(17.10.2023) நடைபெற்றது.
சாயி பாலர் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் க.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மே.வினோராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் செயலாளர் க.மதிமேனன், கிராமத்தலைவர் அ.கந்தவேள், சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி.ஸ்ரீபிரியா வேழவேந்தன், புற்றுநோயியல்துறை வைத்தியர்.எஸ்.காண்டீபன், கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்களான க.மதிசீலன், பே.சச்சிதானந்தம்,பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த வ.ஜனேந்திரராஜா, பெற்ரோர்கள், மாணவர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிறார்கள் மத்தியில் போத்தலில் நீர் நிரப்புதல், எழுத்துக்களை ஒழுங்குபடுத்துதல், எலிட்டம், சாக்கோட்டம், ஜெலி ஊட்டுதல், பானம் அருந்துதல் உள்ளிட்ட பல விளாயாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சியும் இடம்பெற்றது.
இதன்போது பங்குபற்றிய சிறார்களுக்கு சினைவுச் சின்னங்களும், பரிசில்களும் அதிதிகளால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment