14 Oct 2023

லயன்ஸ கழகத்தின் களுவாஞ்சிகுடி நகரக் கிளையின் புதிய நிருவாகத்தினரை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு.

SHARE

லயன்ஸ கழகத்தின் களுவாஞ்சிகுடி நகரக் கிளையின் புதிய நிருவாகத்தினரை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு.

சர்வதேச லயன்ஸ கழகத்தின் களுவாஞ்சிகுடி நகரக் கிளையின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிருவாகத்தினரையும், கழக பொறுப்பாளர்களையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும்  நிகழ்வு புதன்கிழமை(11.10.2023) களுவாஞ்சிகுடியில்  இடம்பெற்றது.

கழகத்தலைவர் நல்லையா சஞ்ஜீவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாகவும், லயன்ஸ கழகத்தின் களுவாஞ்சிகுடி நகரக் கிளைக்குரிய 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிருவாக உறுப்பினர்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் பொறுப்பாளராகவும் லயன்.எம்.ரீ.எம்.அனாவ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது புதிய தலைவராக பிரேமராஜன் பிரேமிதன் அவர்களையும் செயலாளராக லயன் நடேஸ்வரன் புருசோத்மன் அவர்களையும், பொருளாளராக லயன் சாமித்தம்பி சரவணன் அவர்களையும், ஏனைய உப நிருவாக உறுப்பினர்களும், இதன்போது அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இதன்போது லயன்ஸ கழகத்தின் களுவாஞ்சிகுடி நகரக் கிளையினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் தொடர்பிலும், செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், கடந்த காலங்களில் சிறப்பாக சேவையாற்றியோரும் இதன்போது நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





























SHARE

Author: verified_user

0 Comments: