சவுக்கடி ஸ்ரீ பால முருகன் ஆலய வருடாந்த அலங்கார உத்சவ பெருவிழா.
மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி ஸ்ரீ பால முருகன் ஆலய வருடாந்த அலங்கார உத்சவ பெருவிழா 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.
கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி என்பன இடம்பெற்று, தொடர்ந்து 108 சங்காபிசேஷகம் இடம்பெற்றன. பின்னர் திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னுஞ்சலும் இடம்பெற்றறு தீர்தோற்சவத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
ஆலய பரிபாலனசபைத் தலைவர் வடிவேல் விஜயகாந் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உத்சவகால பிரதம குரு சிவ ஸ்ரீ ச.சபாரெத்தின சர்மா தலைமையில் கிரியைகள் இடம்பெற்றன.
இந்நிலையில் சவுக்கடி ஸ்ரீ பாலமுருகன் கலைகுழு மன்றத்தினால் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு, ஆலயத்தின் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
0 Comments:
Post a Comment