28 Oct 2023

அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் - செ.துஜியந்தன்.

SHARE

அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் - செ.துஜியந்தன்.

எந்த ஒரு அரச ஊழியர்களும் முழுமையான சம்பளம் பெறுவதில்லை வங்கி கடன், வட்டிக்கடன் அறவிட்டு எஞ்சிய தொகையே கையில் கிடைக்கிறது. அதுவும் மின் கட்டணம் தண்ணீர் கட்டணம் செலுத்தவே போதுமானதாக இருக்கிறது. 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த ஏழு ஆண்டுகளாக அரச ஊழியர்களுக்கு எந்தவொருசம்பள அதிகரிப்பும் செய்யப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் அரசாங்கம் அரச ஊழியர்களை வஞ்சித்து விட்டதுஇதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் செ.துஜியந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை(28.10.2023) பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.லவகுமார் தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில்  தாய் சங்க பொதுச் செயலாளரும், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான .புஹாது, நிதிச் செயலாளர் .நடராஜா, தேசிய அமைப்பாளர் எஸ்.துஜியந்தன்  உப தலைவர் கே.திருமாறன் உட்பட பெருந்தொகையான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கிழக்கு மாகாண அரச சேவையைச் சேர்ந்த இணைந்து சேவை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முக்கிய தீர்மானங்களும் இங்கு நிறைவேற்றப்பட்டன.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் செ.துஜியந்தன்...கடந்த காலங்களை விட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இரு நூறு வீதத்திற்கும்மேல் உயர்ந்துள்ளது உணவு, பானங்களின் விலைகள், எரிபொருள், பாடசாலைபஸ் கட்டணம், பிள்ளைகளின் கல்வி, மருத்துவம், உணவு, போக்குவரத்து, மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளன. இவைத் தற்போதும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறனபுள்ளி விபரவியல் திணைக்களம் திரட்டிய தகவலின்படி 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இருந்து நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 2421 ரூபா குறைந்தபட்ச செலவாக உள்ளதுவாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் குறைந்த பட்சம் அரச ஊழியர்கள் வாழ்வதற்கான 20 ஆயிரம் ரூபாய் நியாயமான  சம்பள அதிகரிப்பை வேண்டி நிற்கின்றோம் எனத் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: