21 Sept 2023

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஓவியத் திருவிழா.

SHARE

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஓவியத் திருவிழா.

கடந்த நான்கு வருடங்களின் பின் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களம் விபுலானந்தா அழகிய கற்ககள் நிறுவனமும் இணைந்து நடாத்திய  கிழக்கின்  ஓவியத் திருவிழா நிகழ்வு வியாழக்கிழமை(21.09.2023)  மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

மாவட்ட செயலக கலாசார திணைக்கள பணிப்பாளர் எஸ்.மலர்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன். கலந்து கொண்டிருந்தார். இதன்போது மேலும் சுவாமி விபுலானந்த அழகிய கற்க நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. பாரதி கெனடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள் சுவாமி விபுலானந்த அழகிய கற்க நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் மாணவர்கள். பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியானது மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இனங்ளுக்கிடையே ஐக்கியத்தை கட்டி எழுப்பும் வகையிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள கிழக்கின் ஓவியத் திருவிழா தொடர்ந்து மூன்று தினங்கள் தொடர்ச்சியாக இடம் பெறஉள்ளது.

இங்கு 50 இற்கு மேற்பட்ட காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இன ஐக்கியம், மருத்துவம், இயற்கையின் அழகு, சுhற்றாடலை பாதுகாப்போம், சட்டவிரோத கருக்கலைப்பு, விலங்கு வளர்ப்பு, முதுமையின் அழகு, சுனாமியின் கோரத்தாண்டவம், இரும்பு கழிவுகளின் உயிரோட்டமான உயிரியல் அமைப்புக்கள், காட்டு விலங்குகளின் அழகு, கொரோனாவில் எதிர்கொண்ட பாதிப்புக்கள், நல்லூர் ஆலயத்தின் அழகு, பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட வறுமை, என்ன பலதரப்பட்ட தலைப்புக்களின் கீழ் இதன்போது ஓவியங்கள் இந்த கண்காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.. இதனை பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.



























SHARE

Author: verified_user

0 Comments: