3 Sept 2023

கருவறை தொடங்கி கல்லறை வரையில் சேவையாற்றும் பாக்கியம் உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கே உரியது. மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன்.

SHARE

கருவறை தொடங்கி கல்லறை வரையில் சேவையாற்றும் பாக்கியம் உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கே உரியது. மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன்.

ஒருவருக்கு கருவறை தொடங்கி கல்லறை வரையில் சேவையாற்றும் பாக்கியம் உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கே உரியது, எனவே, அந்த வாய்ப்பை அலுவலர்கள் ஒரு வரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரும் முதலமைச்சின் செயலாளருமான என். மணிவண்ணன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சமூக புத்தாக்க அணுகுமுறைகளையும் கருத்திட்டங்களையும் முன்மொழிவுகளாக எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளுராட்சிமன்ற அலுவலர்களைப் பாராட்டி, கௌரவித்து சான்றிதழும் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

சனிக்கிழமை  (02.09.2023)  மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் சனசமூக அபிவிருத்தி உத்தயோகத்தரும் பயிற்றுவிப்பாளருமான  சட்டத்தரணி அன்பழகன் குரூஸ் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

சமூக புத்தாக்க அணுகுமுறைகளையும் கருத்திட்டங்களையும் முன்மொழிவுகளாக எழுதியதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள்; 54 பேர் இந்நிகழ்வில் சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

நிகழ்வில் அலுவலர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்; மணிவண்ணன்,; உள்ளுராட்சி மன்ற நிருவாகம், ஒருவர் பிறந்ததிலிருந்து அவர் இறக்கும் வரையான சேவைகளில் கருமமாற்றுகிறது.

ஆகவே, குடிமக்களின் இந்தத் தேவைகளோடு தொடர்புபட்டு அவர்களுக்குச் சிறந்த சேவைகளபை; புரிய வேண்டுமாயின் அலுவலர்கள் புதிய போக்கில் கற்றுக் கொண்டு புத்தாக்க சிந்தனைகளை உருவாக்கி அவற்றை அறிமகப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதன் மூலம்;தான் உள்ளுராட்சி மன்ற அலுவலர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட விடயங்களை செம்மையாக்கி நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும்.

அரச நிறுவனங்களான  உள்ளுராட்சி மன்றங்கள் சிறந்த முறையில் சேவைகளை வழங்குகிறது என்ற நாமத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அவற்றில் பணியாற்றும் அலுவலர்கள் தமது சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே உங்களிடம் இருக்கின்ற அறிவு, திறன் என்பனவற்றை, பொதுமக்கள் நன்மை பெறும் வகையில் முன்வைக்கின்றபொழுது அதன் பலாபன்கள் சிறப்பானதாக பொதுமக்களைச் சென்று சேரும்.

அதன் மூலம் அலுவலர்கள் தங்களது பெயரையும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரையும் கீர்த்தியுள்ளதாக நிலைபெறச் செய்ய முடியும்.

அவ்வாறான சிறந்த அடைவைப் பெற்றுக் கொள்வதற்கு அலுவலர்கள் ஒருமித்த சிந்தனைப் போக்கில் இணைந்து பணியாற்ற வேண்டும்.

பங்களிப்பும் அர்ப்பணிப்பும் பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அலுவலர்களிடம் இருக்க வேண்டும். அதுவே உள்ளுராட்சி மன்றங்களின் நன்மதிப்புக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும்.” என்றார்.

ஆசிய மன்றம் மற்றும்; ஐநா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் உப தேசிய ஆளுகை வலுப்படுத்தல் திட்டத்தின் பணிப்பாளர்  . சுபாகரன், மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களின்  பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்களான எஸ். பிரகாஸ், . பார்த்தீபன், கமால் நித்மி ஆகியோரும் இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: