23 Sept 2023

இளைஞர்களுக்கான சிறந்ததொரு எதிர்காலம் - தொழில் வழிகாட்டல் செயலமர்வு.

SHARE

இளைஞர்களுக்கான சிறந்ததொரு எதிர்காலம் - தொழில் வழிகாட்டல் செயலமர்வு.

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்பு முகமாக இளைஞர்களுக்கான சிறந்ததொரு எதிர்காலம் எனும் கருத்திட்டத்தின் கீழ் தொழில் வழிகாட்டல் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் விவகார விளையாட்டுதுறை  அமைச்சினால் மாவட்டத்தின் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனை பதிவிட பயிற்சி சனிக்கிழமை(23.09.2023) மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பு முகமாகவும் அரசாங்கத்தால் இத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஆரம்ப நிகழவே இன்று இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர். .நவேஸ்வரன் கலந்துகொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வேளை திட்டத்தில் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார். இன்றைய பயிற்சி செயலமர்வு பிரதான வளவாளராக மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரி பணிப்பாளர் .ஜெயபாலன் கலந்து கொண்டார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுக்கும் இத்தொழில் முனைவோருக்கான வழிகாட்டல் ஆலோசனை வதிவிடப் பயிற்சிநெறி இன்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மட்டக்களப்பு சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைமையக தொழில் முனைவோர் பயிற்சி பிரிவின் உதவிப்பணிப்பார் மற்றும்  மாவட்ட உதவிப் பணிப்பாளர் து.கலாராணி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி என்..நிஷாந்தி அருள்மொழி, மாவட்ட நிஸ்கோ பிரிவின் முகாமையாளர் கி.சதீஸ்வரி இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட தகவல் நிலைய உத்தியோகத்தர் .எம்.ஹனீபா மற்றும் பயிற்சி பெறும் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொன்டிருந்தனர்.

35 இளைஞர் யுவதிகள் மாவட்ட ரீதியில் முதற்கட்டமாக நேர்முக தேர்வின் மூலமாக தெரிவு செய்யப்பட்டு இந்த பயிற்சி செயலமர்வு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.












SHARE

Author: verified_user

0 Comments: