மட்டக்களப்பு மாவட்ட சர்வதேச சுற்றுலா தின பிரதான நிகழ்வு.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்ட சர்வதேச சுற்றுலா தின அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை(27.09.2023) இடம்பெற்றது. இன ஒற்றுமை கலாச்சாரத்திற்கு முன்உதாரணமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.
லண்டன், ஜெர்மன், நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் மற்றும் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன. இந்நிலையில் அச்சுற்றுலாப் பயணிகளின், மீன் பாடும் தேன் நாட்டின் அனுபவ பயிறுவுகளும் இடம்பெற்றன. இதேவேளை மாவட்டத்தின் சுற்றுலா சம்பந்தமான புத்தகக் கண்காட்சி மற்றும் உணவு கண்காட்சியும் முன்னெடுக்கப்கட்டிருந்தது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட ராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள், மன்மனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகஸ்த்தர்கள், பாடசாலை மாணவர்கள், சுற்றுலா பயணிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment