களுமுந்தன்வெளி கஜமுகன் மகாவித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலைத் தோட்டம் தொடர்பான செயன்முறை பயிற்சி.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலய பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இணைப்பாடவிதான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயன்முறைப் பயிற்சிநெறி ஒன்று வெள்ளிக்கிழமை (01.09.2023) பாடசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
அந்தவகையில் வீட்டுத்தோட்டங்கள், பாடசாலை தோட்டங்களில் நஞ்சற்ற உணவுப் பயிர்களை இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் வழிமுறைகள் தொடர்பில் செய்முறை பயிற்சிகளுடன் இதன்போது மாணவர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன.
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் அவர்களுடன் இணைந்து பாடசாலை அதிபர் ராமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாணவர்களுக்கான இவ்விணைப்பாடவிதான பயிற்சிப் நெறியில் விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு தெற்கு வலய உதவி பணிப்பாளர் சி.சித்திரவேல், பழுகாமம் விவசாய போதனாசிரியர் து.ஜெதீசன் காந்திபுரம் விவசாய போதனாசிரியர் ப.சகாப்தன் மற்றும் விவசாயபாட ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்குரிய விளக்கங்களை வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment