முருகபத்து பாடல்கள் நூல் வெளியீடு.
முருகபத்து பாடல்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு வியாழக்கிழமை(31.08.2023) மட்டக்களப்பு வேலோடுமலை முருகன் ஆலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி ஈராளகுளம் பகுதியில் குன்றுகள் நிறைந்து காணப்படுகின்ற மிகவும் பிரசித்திப்பெற்ற ஆலயமாக வேலோடு மலை முருகன் ஆலயம் அமையப் பெற்றுள்ளது.
முருகபத்து பாடல்கள் நூல் வெளியீட்டு நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர், மற்றும் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், கவிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
வேலோடு மலை முருகன் பத்து நூலிலை யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த கவிஞர்ரும் அதிபருமான திருச்செல்வம் தவரத்தினம் அவர்களால் எழுதப்பட்டு, ஆலய நிருவாகத்தினரால் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
நூலின் முதல் பிரதியினை வேலோடுமலை முருகன் ஆலய தர்மகர்த்தாவும் ஓய்வு பெற்ற அதிபருமான சுப்பிரமணியம் தியாகராஜா அவர்களுடைய துணைவியார் பெற்றுக் கொண்டார்.
0 Comments:
Post a Comment