6 Sept 2023

71 வீதமான மாணவர்கள் மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.

SHARE

71 வீதமான மாணவர்கள் மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.

மட்டக்களப்பு கல்வி  வலயத்தில் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி  பெறும் மாணவர்களின் சித்தி வீதம் கடந்த வருடத்தைவிட இம்முறை சகல துறைகளிலும் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி  பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை வலயக்கல்விப் பணிப்பாளர் செவ்வாய்கிழமை(05.09.2023) சந்தித்து அவர்களுக்கு  வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்

கடந்த வருடம் 65 வீதத்திலிருந்து இம்முறை 71 வீதமாக மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பல்கலைக் கழகங்களுக்குச் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. அதிலும் இம்முறை உயிரியல் துறையில் அதிகரித்த சித்தி வீதம் காணப்படுகின்றது. 40 இற்கு மேற்பட்ட மாணவர்கள் இம்முறை பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். புனித மிக்கல் கல்லூரி மாணவன் துரைராஜசிங்கம் இமையவன் மாவட்டத்தில் கணிதத்துறையில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். அதே பாடசாலையில் உயிரியல் துறையில் இம்முறை செசாங்கன் என்ற மாணவன் மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மட்டு நகரின் பிரபல பாடசாலைகளான புனித மிக்க கல்லூரி, வின்சன் தேசிய பெண்கள் பாடசாலை, சிசிலியா மகளிர் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு மத்திய கல்லூரி, மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இம்முறை மட்டக்களப்பு கல்வி  வலயத்தில் இருந்து 40 க்கு மேற்பட்ட மாணவர்கள் உயிரியல் துறையில் பல்கலைக் கழகங்களுக்குச் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.












 

SHARE

Author: verified_user

0 Comments: