ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 40 கைதிகள் விடுதலை.
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் புதன்கிழமை(13.09.2023) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்தசில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இதன்போது இவ்வாறு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment