மட்.களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையிலிருந்து 123 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி.
வெளியிடப்பட்ட கல்வி பொதுத்தர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட, களுதாவளை மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் தோற்றிய 169 மாணவர்களில் 123 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக அப்பாடசாலையின் பழையமாணவர் சங்கம் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதில் விஞ்ஞானப் பிரிவில் 12 மாணவர்களும், வர்த்தகப் பிரிவில் 14 மாணவர்களும், தொழினுட்பப்பிரிவில் 37 மாணவர்களும், கலைப்பிரிவில் 60, மாணவர்களுமாக மொத்தமாக 123, பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அதில் 9 மாணவர்கள் மூன்று பாடங்களில் 3 ஏ சித்திகளையும், பெற்றுள்ளனர். தி.கல்கினி வர்த்தகப்பிரிவில் மாவட்டத்தில் 8 ஆம் நிலையினையும், கி.நிபோசன் உயிர்முறைமைகள் தொழினுட்பத்தில் மாவட்டத்தில் 8 ஆம் நிலையினையும், வி.நாவரசன் பொறியியல் தொழினுட்பத்துறையில் மாவட்டத்தில் 8 ஆம் நிலையினையும் பெற்று பாடசாலைக்கும் பாடசாலைச் சமூகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் மாணவர்களுக்கு கற்பித்து ஊக்கப்படுத்திய அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் பாதுகாவலர்களுக்கு எமது பழைய மாணவர் சங்கம் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக களுதாவளை மகாவித்தியாலய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment