15 Aug 2023

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் உடற்பயிற்சி கூடம்(Gim) திறப்பு.

SHARE

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் உடற்பயிற்சி கூடம்(Gim) திறப்பு.

தொற்றா நோய்களை இல்லாதொழிக்கும் சுகாதார அமைச்சின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால்  மட்டக்களப்பு நகரில் உடற்பயிற்சி கூடம் ஞாயிற்றுக்கிழமை (13.08.2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் தலைமையில் குறித்த உடற்பயிற்சி கூடம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைமுன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உடற்பயிற்சி கூடத்தில் சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களில் பணிபுரிவோர் மற்றும் பொதுமக்கள் உடற்பயிற்சியில் ஈடுபட முடியும்

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி சுகுணன் "தினமும் 30 நிமிடம் தொடக்கம் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தொற்றா நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். தினமும் உடற்பயிற்சி செய்தல், உணவு பழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வருதல், புகைப்பிடித்தலை நிறுத்தல், மது அருந்துவதை நிறுத்துதல் இந்த நான்கு காரணிகளூடாக தொற்றா நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே தினமும் இந்த உடற்பயிற்சி கூடத்திற்கு வருகை தந்து உடற்பயிற்சியில் ஈடுபட முடியும்"எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்  உதயகுமார் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வைத்து அதிகாரிகள் தாதிய உத்தியோகத்தர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  அதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: