கிழக்கு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விரிவுரையாளர்களுக்கான விடுதிகள் திறந்து வைப்பு.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மருத்துவபீட மாணவர்களின் நலன் கருதி கல்வி அபிவிருத்திட்டப் பணிகளை வினைதிறனுடையதாக முன்னெடுக்கும் வகையில் பொருளாதார நெருக்கெடிக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.உயர்கல்வி அமைச்சினால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களின் நலன் கருதி மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள மருத்துவ பீடத்தில் 80 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விரிவுரையாளர்களுக்கான இரண்டு விடுதிகளின் திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் திங்கட்கிழமை(07.08.2023) திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய கட்டிடங்களுக்கான நிர்மாண பணிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்;ட பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக இதன் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது அரசாங்கம் உயர்கல்வி அமைச்சினால் மருத்துவபீட மாணவர்களின் நலன் கருதி பௌதிக வளற்சி ஏற்பாடுகளை தற்போது விரைவாக முன்னெடுத்து வருகின்றது. தமிழர் கலாச்சாரப்படி இந்த புதிய விடுதிகள் திறந்து வைக்கப்பட்டன. கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பதில் உப வேந்தர் வைத்தியர் கருணாகரன். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் விரிவுரையாளர்கள், பதிவாளர், மாணவர்கள், என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment