15 Aug 2023

கடந்த மூன்று வருடங்களின் பின் கிழக்கு மாகாணத்தில் முதலாவது தடவையாக இடம்பெற்ற சர்வதேச நீச்சல் பயிற்சி.

SHARE

கடந்த மூன்று வருடங்களின் பின் கிழக்கு மாகாணத்தில் முதலாவது  தடவையாக இடம்பெற்ற சர்வதேச நீச்சல் பயிற்சி.

கிழக்கு மாகாணத்தில் இளைஞர்களுக்கு சர்வதேச நீச்சல் பயிற்றுனரினால் நீச்சல் பயிற்சி மட்டக்களப்பு வெபர் நீச்சல் தடாகத்தில் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லெப்பையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு சனிக்கிழமை(12.08.2023) இடம்பெற்றது. விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சோல்வ் பவுண் டேசன் (ளுழடஎந குழரனெயவழைn ) அனுசரணையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பாசறையின் பிரதான பயிற்றுனராக அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சிட்னி ஒலிம்பிக் பார்க் மைதானத்தின் பயிற்றுனர் பஞ்சரத்தினம் தம்பு இதன்போது கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நீச்சல் பயிற்றுவிப்பாளர்கள், உயிர்க்காப்பு நீச்சல் கற்கை நெறியை நிறைவு செய்தவர்கள், மற்றும் நீச்சல் வீரர்கள் போன்றோருக்கு நீச்சல் தொழில் நுட்பங்கள், மற்றும் பயிற்சிகள் தொடர்பாக இதன் போது வளவாளரினால் பயிற்றுவிக்கப்பட்டன. பயிற்சியில் கலந்து கொண்ட நீச்சல் வீரர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்கள் இதன்போது  வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன், விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். சிறந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவதற்கு இப்பயிற்சிகள் உதவுவதுடன் எதிர் காலத்திலும் இவ்வாறான பயிற்சிகள் இடம்பெறவுள்ளதான விளையாட்டு உத்தியோகஸ்த்தர்கள் இதன்போது தெரிவித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: