வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் அம்பாறை
மாவட்டத்தில் இரு பாடாலைகளுக்கு திறன் வகுப்பறைகள் திறந்து வைப்பு.
இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், மூவின மக்கள் மத்தியிலும் சமூக சேவைகளை மேற்கொண்டுவரும் வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலிவில் சரஸ்வதி வித்தியாலயம், மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அல்முனீறா மகளிர் உயர்தர பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளிலும் புதன்கிழமை(23.08.2023) திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது வன்னிஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர்களான றஞ்சன் சிவஞானசுந்தரம்,(அவுஸ்ரேலியா), வைத்தியர் மாலதி வரன் (அவுஸ்ரேலியா), எம். ரி.எம்.முகமட் பாரீஸ்(இலங்கை) மற்றும் இணைப்பாளர்களான சீ.ரேகா, ஆர்.கணேசமூர்த்தி, வ.சக்திவேல், மற்றும், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள். கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட கலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அவுஸ்ரேலியாவில் தலைமையாகக் கொண்டு இலங்கையில் நாலாபாகமும், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், உள்ளிட்ட பல விடையங்களை மேம்படுத்தும் முகமாக தன்னார்வமாக சமூகசேவைகளை மேற்கொண்டுவரும் வன்னிஹோப் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இதன்போது கல்விச் சமூகத்தினர் தமது வாழத்துக்களை இதன்போது தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment