15 Aug 2023

இங்கிரிய தும்பறை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE


இங்கிரிய
தும்பறை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

இங்கிரிய தும்பறை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது மூத்த பத்திரிகையாளரும், சமூக சமய செயற்பாட்டாளருமான, தேவதாஸ் சவரிமுத்து அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் இதன்போது ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் இஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சகோ.போல்.கிறிஸ்தோபர், வித்தியாலய அதிபர் இராஜேந்திரன், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மலைய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள், என்பதை நான் நன்கு அறிவேன். அதன் ஒரு பகுதியாக தற்போது எம்மால் முடிந்த அளவிற்கு கற்றல் உபகரணங்கைள வழங்கி வைத்துள்ளோம். இதுபோன்று நாம் மலையத்திலுள்ள பாடசாலைகள் தோறும் மேலும் தொடர்ந்து கற்றல் உதவிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இதுபோன்று ஏனையோரும் மலையக மாணவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ளவதற்கு முன்வரவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து மலையக மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியளிக்க முன்வரவேண்டும் என மூத்த பத்திரிகையாளர் தேவதாஸ் சவரிமுத்து இதன்போது தெரிவித்தார்.













 

SHARE

Author: verified_user

0 Comments: