குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய மாணவர்களுக்கு விசேட கரப்பந்தாட்ட பயிற்சிநெறி.
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் தரம் 6 தொடக்கம் 10 வரையான மாணவர்களுக்கு விசேட கரப்பந்தாட்ட பயிற்சிநெறி செவ்வாய்கிழமை(22.08.2023) இடம்பெற்றது.
குருக்கள்மடம் கிராமத்தில் வரலாற்று ரீதியாக தனக்கென ஒரு சரித்திரத்தை படைத்த விளையாட்டுகளில் கரப்பந்தாட்டம் காணப்படுகிறது.
இதன்போது குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் கரப்பந்தாட்ட தலைமைப் பயிற்றுவிப்பாளர் எஸ்.தயானந்தன் தலைமையிலான குழுவினர் மாவர்களுக்குரிய பயிற்றிகளை முன்னெடுத்திருந்தனர்;.
இந்த நிகழ்வில் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் அதிபர் சிறிதரன் அவர்களும், ஆரம்பிப்பாளராக அருளானந்தம் மற்றும் ஏசியன் விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர்கள், வீரர்கள் எனப்பலர் கலந்து கொண்டு மாணவர்களை வழிப்படுத்தியிருந்தனர்.
இதன் போது அணி ரீதியாக சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இதில் திறமையான நட்சத்திர ஆட்ட நாயகர்களாக டெசாட்சரன், டீனுகோபன், தஸ்வின், கோலக்ஷன் போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் போது வெற்றியீட்டிய அணி, இரண்டாம் இடம் பெற்ற அணிகளுக்கு வெற்றிகேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment