அடிப்படை முதலுதவிப் பயிற்சிநெறி.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களும் தெரிவு செய்யப்பட்ட 20 தொண்டர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி நெறி ஒன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மென்ரேசா வீதியில் அமைந்துள்ள கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
கிராமங்கள் தோறும் முதலுதவியின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒவ்வோர் முதலுதவியாளர் இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறக்கிராமங்கள், மற்றும், ஆலய உத்சவங்களின்போது இங்கு பயிற்றப்பட்ட தொண்டர்கள் முதலுதவிப் பணியை மேற்கொள்ளவுள்ளனர்.
வீடுகளிலும், பொது இடங்களிலும், பாதிப்புறும் நோயாளியை வைத்தியர் வரும் வரையில் அல்லது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வரையில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி செயற்பாடுகள், தொடர்பில் இரண்டு நாட்களும், மிகவும் தெழிவாகவும், விரிவாகவும் தொண்டர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன், இதில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா மற்றும் முதலுதவிப் பயிற்றுவிப்பாளர் வ.சக்திவேல் ஆகியோர் இப்பயிற்சிநெறியை வழங்கி வைத்தனர்.
இப்பயிற்சி இறுதி நிகழ்வின்போது செயலாளர் சா.மதிசுதன், கிளை நிறைவேற்று உத்தியோகஸ்த்தர் திருமதி.பி.வேணுஷா, தேடுதலும் பாதுகாத்தலுக்குமான உத்தியோகஸ்த்தர் ருத்திராஜ் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment