கிரான்குளத்தில் தென்னம் தோட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீ
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்ப ற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட கிரான்குளம் கிராமத்தில் கடற்கரை அண்மித்திருந்த தோட்டங்களில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியிலிருந்த மிகவும் பயன்தரும் தென்னை, பனை, உள்ளிட்ட மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தீயை விவசாயிகள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த முற்பட்ட போதும் அது முடியாமல் போயிவிட்டது. இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இத்தீ பரவலானது திட்டமிட்ட செயலான அல்லது வேறு எவ்வாறு இடம்பெற்றிருக்கலாம் என்பது தொடர்பில் விவசாயிகளும், பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment