சித்தாண்டி சித்ததிர வேலாயுத சுவாமி பேராலயத்தின் மகோற்சவத்தின் பிரணவ தீர்த்தோற்சவம்.
வரலாற்று சிறப்பு பெற்றதும் சிகண்டி முனிவரினால் பூசிக்கப்பட்ட வேலுடைய சித்தாண்டி சித்ததிர வேலாயுத சுவாமி பேராலயத்தின் மகோற்சவத்தின் பிரணவ தீர்த்தோற்சவம் புதன்கிழமை(31.08.2023) நடைபெற்றது.
தீர்த்துவத்திற்காக
சுன்னம் இடித்தல் பூசை நிகழ்வு ஆலயத்தில் சிவசாரியாளர்களின் தலைமையில்
நடைபெற்றது.
சிவாச்சாரியார்களினால்
வேத பாராயணம் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சித்தாண்டி
சித்திரவேலாயுத சுவாமி பிரணவ தீர்த்தோற்சவத்திற்கு சித்தாண்டி உதயன்மூலையில்
அமைந்துள்ள சரவணப் பொய்கை தீர்த்த குளத்துக்கு எழுந்தருளினார்.
பிரணவ தீர்தோற்வத்திற்கு
எழுந்தருளிய எம்பெருமானுக்கு அடியார்களினால் ஆனந்த காவடி புடை சூழ அரோகரா கோஷத்துடன்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரணவ தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
எம்பெருமானின் மகோற்சவ
கொடியேற்றமானது நாகபூசணி அம்பாள் தேவஸ்தானத்தின் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ க. கைலாச வாமதேவ
குருக்கள் மற்றும் கைலாச பானு தலைமையில் சென்ற 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
ஆரம்பமாகி 15 நாட்களும் பெருவிழா நடைபெற்றது.
இலங்கையில் அமையப்பெற்ற
முருகன் ஆலயங்களில் எங்கும் இல்லாதவாறு முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் செய்து
வைக்கும் மயில்கட்டு எனும் தெய்வீக திருமண பெருவிழா 27,28,29ஆகிய மூன்று
தினங்களிலும் நடைபெற்றது.
தீர்த்த உற்சவத்துக்கு
எழுந்தருளிய எம்பெருமானுக்கு நேர்த்திக்கடன் தீர்ப்பதற்காக நூற்றுக்கணக்கில்
பொங்கல் பானைகளும் படைக்கப்பட்டது.
அரோகரா கோஷம் முழங்க
ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபெற்றலுடன் தீர்த்தோற்சம் இனிதே நிறைவு
பெற்றது.
0 Comments:
Post a Comment