மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பௌத்த மதகுரு உள்ளிட்டோரால் சுற்றி வளைத்து தடுத்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு மயிலத்தமடு, மாதவனைப் பகுதிக்கு செவ்வாய்கிழமை(22.08.203) சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்களை அங்கிருந்த பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழு அவர்களைச் சுற்றி வளைத்து அங்கிருந்து வெளியேற முடியாதவாறு வைத்துள்ளதாக அவர்களிடம் அகப்பட்டுள்ள ஊடகவியலாளர்களும். சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர்.பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சனைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காகவே இவர்களின் களவிஜயம் அமைந்திருந்தது.
இக்குழு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்ததன் பின்னர் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பி செல்லும்போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இனைந்து அசர்கள் அணைவரையும் வரும் வழியில் மறித்து சிறைபிடித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவர்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மாவட்டத்திலுள்ள ஏனை சக ஊடகவியலார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்ள் அனைவரும், மாவட்ட பொலிசார், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்நிலமை தொடர்பில் அறிவித்துள்ளனர்.
செவ்வாய்கிழமை மாலை 4 மணி வரையிலும் அக்குழுவினரை குறிந்த பௌத்த மதகுரு மற்றும் உள்ளிட்மோர் விடுவிக்காமல் அவர்களின் வைத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment