அகில இலங்கை பரதநாட்டிய போட்டியில் வலயமட்டத்தில் திருகோணமலை இராவணேஸ்வரன் முதலாமிடம்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான வலயமட்ட பரதநாட்டிய போட்டி திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் செவ்வாயக்;கிழமை (15.08.2023) நடைபெற்றது. இதில் கிராமிய நடனம் - தப்பு நடனத்தில் திருகோணமலை மாவட்டம் கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயம் வலயமட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் பங்கு பற்றிய பாடசாலை மாணவர்களுக்கும் நடனம் பயிற்றுவித்த நடன ஆசிரியை திருமதி சுஜீன் பிரசாந்தினி, பாடல் பாட உதவிய சங்கீத ஆசிரியர் திருமதி கோகிலன் சரணியா, பாடசாலை அதிபர் தா.சிவானந்தம், உள்ளிட்ட அனைவருக்கும் கல்விச் சமூகத்தினர் தமது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதில் அப்பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் கமல்ராஜ், பிராசன், காண்டீபன், சோன்ஜன், கெங்காதரன், அபிசேக், தரம் 10 இல் கல்வி பயிலும், சிவகுமார், டிசாந்த், செல்வராஜா, நிவேதிகா, கைலைநாதன் கரணி, தரம் 11 இல் கல்வி பயிலும் செல்வரட்ணம் ஷரணி, ஸ்ரலின் திவ்யா, ஆகிய மாணவர்கள் நடித்துள்ளனர்.
மேலும் இதற்கான இசை வாத்தியத்தை தரம் 9 இல் கல்வி பயிலுத் சந்திரமோகன் லவர்சன் மற்றும் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் கைலாயபிள்ளை வினோஜன் ஆகிய மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment