பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – பிரசாந்தன்.
அவரது கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை(14.08.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்….. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அண்மையில் எமது கட்சியையும் அதனுள் உள்ளீர்;த்து தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். குறிப்பாக எமது அரசியல் இருப்பை அழிக்கும் நோக்குடனும் குண்டு வெடிப்புடன் சம்பந்த படுத்திய கூற்றுக்கு எதிராகவும் நாம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
நாட்டின் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பெயரில் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக எமது கட்சியின் தலைவர் அது தொடர்பான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் அதில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் அவை மத்திய அரசாங்கத்துக்கு உரிய அதிகாரங்களை என அவை வரையறுக்கப்பட வேண்டும் எனவும்.
ஏற்கனவே மீளப் பெறப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் 13வது திருத்தச் சட்டத்தின்படி அவை வழங்கப்பட வேண்டும். மாகாண சபை கலைக்கப்பட்டால் தேர்தல் சட்ட திட்டத்தின்படி அடுத்த மாகாண சபைக்குரிய அமர்வு தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகளை மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர மத்திய வங்கி அனுமதி வழங்கப்பட வேண்டும். மாவட்ட ரீதியான அபிவிருத்திகளை முன்னெடுக்க துறைசார் அதிகாரிகளை நியமிப்பதும், மாவட்ட செயலாளரை நியமிப்பது, சம்பந்த மாகவும் மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும், எனவும் நாம் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகளை வழங்க இந்த 13 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நமது கட்சி நடவடிக்கைகளை எடுக்கும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment