தென்கொரிய பயிற்சியாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் கல்வி அமைச்சினால் கராத்தே பயிற்சி முகாம் ஆரம்பம்.
தற்காப்பு கலையை ஊக்குவிக்கும் நோக்குடனும் மாணவர்களிடையே தற்காப்பு கலையை மேம்படுத்தும் வகையிலும் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி செயலமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தென்கொரிய நாட்டில் இருந்து விஜயம் செய்துள்ள இரண்டு கராத்தே பயிற்சி நிபுணர்களினால் குறித்த பாடசாலை மாணவர்களுக்கு கராத்தே பயிற்சிகள் செவ்வாய்கிழமை (08.08.2023) வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் நூறு பாடசாலை மாணவர்கள் குறித்த பயிற்சியாளர்கள் மூலம்
பயிற்சியை பெற்றுக்கொண்டனர். 15 பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
தென் கொரிய டெக்வண்டோ பயிற்சி நிலையத்தை சேர்ந்த நிபுணர்களான மாஸ்டர் வொன் ஜோங் வோன்
மாஸ்டர் செய் சன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு கராத்தே பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பயிற்சி முகாம் பொறுப்பாசிரியர்
கே.டி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது .
பயிற்சி நிலைய பயிற்சியாளர்களான குகதாசன், விமல், கணேஷ், ரத்னம், நந்தகுமார், கேடிசன்,
கோபி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு வலைய உடற்பயிற்சி உதவி கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார் கிழக்கு
பல்கலைக்கழக திருகோணமலை வளாக உடற்கல்வி இணைப்பாளர் டி.கிருஷ்ணபிரபு ஆகியோர் அதிதிகளாக
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர் ஒரு நாள் பயிற்சியை முடித்துக் கொண்ட மாணவர்களுக்கு
தெளிவுரைகளும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment