கிராமிய வீதிகள் ராஜாங்க அமைச்சினால் 10மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமப்புப் பணிகள் ஆரம்பித்து வைப்பு.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதியில் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சினால் 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்புப் பணிகள் புதன்கிழமை (09.08.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட முதலாம் குறுக்கு சாரதா வீதியானது கடந்த பல வருடங்களாக வெள்ள அனர்த்தத்தின் போது அங்குள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த அக்குறித்த வீதி கொங்கிரீட் வீதியாக அமைக்கும் பணிகள் முன்நெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது ராஜாங்க அமைச்சரின் பிரதிநிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தித்திட்ட பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
10 மில்லியன் ரூபா நிதி ஒதக்கீட்டில், இவ்வீதி 21 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலத்தையும் கொண்டதாக அவ்வீதி புனரமைக்கப்பட உள்ளது. இதுவரை காலமும் இவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மழை காலங்களில் மிகவும் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர், கடந்த காலங்களில் அப்பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் இன்றைய இந்த அவ்வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பிரதான நிறைவேற்று பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment