25 Jul 2023

கிழக்கில் பாரம்பரிய கலைகளை பயிற்றுவிக்கும் அகரம் மக்கள் கலைக்கூடம்.

SHARE

(லக்ஸ்)

கிழக்கில் பாரம்பரிய கலைகளை  பயிற்றுவிக்கும் அகரம் மக்கள் கலைக்கூடம்.

கிழக்கின் தலைநகரில் எமது பாரம்பரிய கலைகளை அனைவரும் கற்றுக்கொள்வதற்காக மண்ணின் மைந்தர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் அகரம் மக்கள் கலைக்கூடம் தற்போழுது சிலம்பம் , யோகா ,வயலின் , புல்லாங்குழல் ,சித்திரம் , நடனம் மற்றும் நாடகம் போன்ற கலைவகுப்புக்களை நடாத்திவருகின்றதுஇதன் மூலம் சிறிய கட்டணத்தில் இவற்றை கற்றுக்கொள்ளமுடியும் என அகரம் மக்கள் கலைக்கூடம் தெரிவித்துள்ளது.

வாத்தியக்கருவிகள் அனைத்தும் கலைக்கூடத்தால் வழங்கப்படும். உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர வாருங்கள். நெல்லை விதை விதைத்தால் அதில் கள்ளி பூ முளைக்குமா? நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா? பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு , 0740005344, நிர்வாகம், அகரம் மக்கள் கலைக்கூடம், திருகோணமலைஎனும் தொலைபேசி மற்றும் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் கலைக்கூடம் மேலும் தெரிவித்துள்ளது.





SHARE

Author: verified_user

0 Comments: