அம்பிளாந்துறையில் இடம்பெற்ற நடமாடும் சேவை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுனரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு - பட்டிபளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(29.07.2023) அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் மாபெரும் நடமாடும் சேவை இடம்பெற்றது.
இதன் போது பதிவாளர் கிளையின் சேவைகள், அடையாள அட்டை வழங்கும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், சமூர்த்தி மற்றும் கிராம சேவகர் தொடர்பான சேவைகள்,ஆயுள்வேத மருத்துவம், ஏனைய மருத்துவ சேவைகள் என்பன பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இச்சேவையின் மூலமாக அப்பகுதிவாழ் பொதுமக்கள் பலர் நன்மை அடைந்தார்கள்.
இதன்போது அப்பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. மேனகா புவிகுமார், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், ஏனைய திணைக்களகங்களின் அதிகாரிகள், மற்றும் உத்தியோகஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மக்களுக்கு அதே இடத்தில் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment