தாய்லாந்து நாட்டில் உள்ள கூட்டுறவு சபைகளின் ஊடாக ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது- இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்.
எமது நாட்டின் உள்ளூர் உற்பத்திகளை தாய்லாந்து நாட்டில் உள்ள கூட்டுறவு சபைகளின் ஊடாக ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது- இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (03.07.2023) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது அமைச்சின் அலுவலகத்தில் தமது அமைச்சினூடாக தாய்லாந்து நாட்டுக்கு முன்னெடுக்கப்பட்ட விஜயத்தின் போது நாட்டில் உள்ள கூட்டுறவு சபைகளின் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அமவர் மேலும் தெரிவிக்கையில்…
தாய்லாந்து நாட்டில் தற்போது கூட்டுறவு அமைப்புகள் ஊடாக பாரிய முன்னேற்றகரமான செயற்பாடுகள், இடம்பெற்று வருகின்றன உலகின் பல நாடுகளில் இந்த கூட்டுறவு அமைப்பு பலமான ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகின்றது. எமது நாட்டிலும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களை ஒரு பலமான அமைப்பாக. முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எமது அமைச்சினூடாக முன்னெடுத்து வருகின்றோம். எமது நாட்டில் இருந்து தேயிலை மற்றும் உள்ளூர் உற்பத்திகளை தாய்லாந்து நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கான எமது நாட்டின் கூட்டுறவு சபை ஊடாக.
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதுடன் தாய்லாந்தில் இது சம்பந்தமான ஒரு மகாநாட்டிலும் இலங்கை பிரதிநிதிகள் உடன் நான் கலந்து கொண்டேன். இலங்கை நாட்டில் உள்ளூர் உற்பத்திகளை தாய்லாந்து நாட்டில் உள்ள கூட்டுறவு சபைகளின் ஊடாக. ஏற்றுமதி செய்வதற் கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment